ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கும் பாகிஸ்தான் இராணுவத் தளபதி

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

பாகிஸ்தான் இராணுவ தளபதி உள்ளிட்ட குழுவினர் கடந்த ஞாயிற்றுக்கிழமை மாலை இலங்கை வந்திருந்தனர்.

இந்த நிலையில், இன்றைய தினம் பாகிஸ்தான் இராணுவத்தளபதி, ஜனாதிபதி மற்றும் பிரதமரை சந்திக்கவுள்ளார்.

இதேவேளை பாகிஸ்தானின் இராணுவத் தளபதி ஜெனரல் கமார் ஜவாட் பஜ்வா, இலங்கை இராணுவத் தளபதி மஹேஸ் சேனாநாயக்கவை இலங்கை இராணுவ தலைமையகத்தில் வைத்து நேற்றைய தினம் சந்தித்துள்ளார்.

இந்த சந்தர்ப்பத்தில் இன்றைய தினம் இடம்பெறவுள்ள ஜனாதிபதி மற்றும் பிரதமருடனான சந்திப்பில் இரு நாடுகளுக்கும் இடையிலான முக்கிய விடயங்கள் தொடர்பில் ஆராயப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.