வவுனியா புதிய பேருந்து நிலையத்தில் திடீரென சரிந்து விழுந்த மின்கம்பம்

Report Print Theesan in பாதுகாப்பு

கடந்த ஆண்டு வவுனியாவில் திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையத்திலுள்ள மின்கம்பமொன்று திடீரென சரிந்து விழுந்துள்ளது.

குறித்த சம்பவம் நேற்றைய தினம் இடம்பெற்றுள்ளதுடன், எனினும் இந்த சம்பவத்தால் யாருக்கும் பாதிப்பு ஏற்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.

வவுனியாவில் கடந்த ஆண்டு திறந்து வைக்கப்பட்ட புதிய பேருந்து நிலையம் 195 மில்லியன் ரூபா செலவில் அமைக்கப்பட்டுள்ளது.

குறித்த பேருந்து நிலையம் திறந்து வைக்கப்பட்டு ஒரு வருடமாகியுள்ள நிலையிலும், இந்த பேருந்து நிலையத்தில் பணிகள் ஆரம்பிக்கப்பட்டு 17 நாட்களாகின்ற நிலையிலேயே இந்த மின்கம்பம் சரிந்து விழுந்துள்ளது.

Latest Offers