கொழும்பில் தலைவரை சிறைப்பிடித்த ஊழியர்கள்! போராடி மீட்ட பொலிஸார்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கை மின்சார சபைத் தலைவரை அதன் ஊழியர்கள் சிறைப்பிடித்ததால், மின்சார சபை வளாகத்தில் இன்று பெரும் பதற்ற நிலை ஏற்பட்டது.

கடந்த 2014 ஆம் ஆண்டு மின்சார சபை நிர்வாக அதிகாரிக்கு முறையற்ற விதத்தில் வேதன உயர் வழங்கப்பட்டதாக தெரிவித்து, அதனை உடன் இரத்துச் செய்தல் உள்ளிட்ட சில கோரிக்கைகளை முன்வைத்து மின்சார சபை ஊழியர்கள் இந்த நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளனர்.

மின்சார சபை தலைவரை அவரின் உத்தியோகபூர்வ அறைக்குள் வைத்து ஊழியர்கள் சிறைப்பிடித்துள்ளனர்.

இந்த நிலையில், ஊழியர்களால் சிறைப்பிடிக்கப்பட்டிருந்த மின்சார சபைத் தலைவரை பொலிஸ் கலகம் அடக்கும் படையினர் மீட்டுள்ளனர்.

அத்துடன், நிலைமையை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இதேவேளை சற்று முன்னர் மின்சார சபையை முற்றுகையிட்ட ஊழியர்களை அப்புறப்படுத்த பொலிஸார் எடுத்த முயற்சியினால் பொலிஸாருக்கும், ஊழியர்களுக்கம் இடையில் மோதல் ஏற்பட்டுள்ளது.

எனினும் சற்று நேரத்தில் அது முடிவுக்கு கொண்டுவரப்பட்டதாக அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

காணொளியைப் பார்வையிட