புத்தகயாவின் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்டுள்ளது

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

இந்தியாவின் தம்பதிவ புத்தகயா விகாரை அமைந்துள்ள பிரதேசத்தில் வெடி குண்டு மீட்கப்பட்ட சம்பவம் குறித்து இலங்கையர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என மீண்டும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பிரதேசத்தின் பாதுகாப்பு முற்றாக உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இந்தியாவின் மகாபோதி அமைப்பின் புத்தகயா மத்தியஸ்தான அதிபதி அங்குருகம்மன சத்தாதிஸ்ஸ தேரர் தெரிவித்துள்ளார்.

இந்திய பாதுகாப்பு தரப்பினர் புத்தகயா பகுதியின் பாதுகாப்பை ஏற்கனவே உறுதிப்படுத்தியுள்ளனர்.

அமைதியான சூழலில் புத்தகயா புனித பூமியில் வணக்க வழிபாடுகளில் ஈடுபட இலங்கையர்களுக்கு சந்தர்ப்பம் உள்ளது. வதந்திகளால் அச்சம் கொள்ள தேவையில்லை எனவும் தேரர் குறிப்பிட்டுள்ளார்.

இதனிடையே பிரதேசத்தின் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதால், இலங்கையர்கள் அச்சம் கொள்ள தேவையில்லை என இந்தியாவுக்கான இலங்கையின் உயர்ஸ்தானிகர் சித்தராங்கனி வாகிஸ்வர கூறியுள்ளார்.

திபேத்திய ஆன்மீக தலைவர் தலாய் லாம புத்தகயா விகாரையில் வழிபாடுகளை செய்து விட்டு புறப்பட்டுச் சென்று சிறிது நேரத்தில், விகாரையின் 4 வது இலக்க நுழைவாயிலுக்கு அருகில் 10 கிலோ கிராம் எடை கொண்ட இரண்டு வெடி குண்டுகள் மீட்கப்பட்டன.