கொள்ளுப்பிட்டி, வெள்ளவத்தையில் முக்கியஸ்தர்களின் வீடு சுற்றிவளைப்பு! சற்று அசாதாரண நிலை

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

வெள்ளவத்தை, கொள்ளுப்பிட்டி ஆகிய பகுதிகளிலுள்ள வீடுகளை குற்ற புலனாய்வு பிரிவினர் அதிகாலையில் சுற்றி வளைத்துள்ளமையால் அங்கு பதற்ற நிலை ஏற்பட்டுள்ளது.

பேர்ப்பச்சுவல் டெஷரீஸ் நிறுவனத்தின் உரிமையாளர் அர்ஜுன் அலோசியஸ் மற்றும் அந்த நிறுவனத்தின் பிரதம நிறைவேற்று அதிகாரி கசுன் பாலிசேன ஆகியோரின் வீடுகள் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

கொள்ளுப்பிட்டி இன்னர் பிளவர் வீதியில் உள்ள வீட்டில் அர்ஜூன் அலோஷியஸ் வீடும் வௌ்ளவத்தை அர்துசா வீதியிலுள்ள கசுன் பாலிசேன வீடும் குற்ற புலனாய்வு திணைக்களத்தினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளன.

குற்ற புலனாய்வுத் திணைக்களத்தின் அதிகாரிகள் குழுவொன்று இன்று காலை ஆறு மணியளவில் வீடுகளை சுற்றி வளைத்துள்ளனர். சில அதிகாரிகள் வீடுகளுக்குள் சென்று விசாரணைகளை நடத்துவதாக தெரிய வருகிறது.