சர்ச்சைக்குரிய பிரியங்கவை லண்டனிலிருந்து நாடு கடத்த தமிழர்கள் எதிர்ப்பு!

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

லண்டனிலுள்ள தமிழர்களுக்கு கொலை அச்சுறுத்தல் விடுத்த இலங்கை இராணுவ அதிகாரியை பிரித்தானியாவை விட்டு வெளியேற்ற வேண்டாம் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

புலம்பெயர் தமிழ் அமைப்பு ஒன்றினால், பிரித்தானிய அரசாங்கத்திடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

லண்டனிலுள்ள இலங்கை தூதரகத்தில் பணியாற்றும் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ, சைகை மூலம் தமிழர்களுக்கு கொலை எச்சரிக்கை விடுத்திருந்தார்.

அவருக்கு எதிராக பல்வேறு சர்ச்சைகள் எழுத்துள்ள நிலையில், அவரை நாடு கடத்துமாறு பல்வேறு கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டுள்ளது.

இலங்கையில் நடைபெற்ற யுத்தம் நடைபெற்ற காலப்பகுதியில் போர்க்குற்ற நடவடிக்கையில் பிரியங்கர பெர்னாண்டோ தொடர்புபட்டுள்ளதாக, குறித்த புலம்பெயர் அமைப்பினால் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

இந்நிலயில் அவருக்கான நடவடிக்கை மேற்கொள்வதற்கு இது சிறந்த சந்தர்ப்பம் என அந்த அமைப்பு, பிரித்தானிய அரசாங்கத்திடம் சுட்டிக்காட்டியுள்ளது.

கடந்த நான்காம் திகதி லண்டனிலுள்ள இலங்கை தூதரத்திற்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட தமிழர்களை கொலை செய்யப் போவதாக பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ அச்சுறுத்தியிருந்தார்.

இந்த விவகாரம் சர்வதேச ரீதியாக பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள நிலையில், புலம்பெயர் தமிழ் அமைப்பின் கோரிக்கை தொடர்பான தகவலை கொழும்பு ஊடகம் ஒன்று வெளியிட்டுள்ளது.