இராணுவத் தளபதியை சந்தித்த அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலய பாதுகாப்பு ஆலோசகர்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கையிலுள்ள அவுஸ்திரேலிய உயர்ஸ்தானிகராலயத்தின் புதிய பாதுகாப்பு ஆலோசகரான குரூப் கெப்டண்ட் சீன் அன்வின், இராணுவத் தளபதி லெப்டினன்ட் ஜெனரல் மகேஷ் சேனாநாயக்கவை சந்தித்துள்ளார்.

இராணுவத் தலைமையகத்தில் இன்று இந்தச் சந்திப்பு இடம்பெற்றுள்ளது.

இதன்போது இரு நாடுகளுக்கும் இடையிலான பரஸ்பர உறவுகளின் முக்கியத்துவம் பற்றி கலந்துரையாடப்பட்டதாக இராணுவம் தெரிவித்துள்ளது.

அத்துடன், குறித்த சந்திப்பை நினைவுகூரும் வகையில், இவ்விருவருக்குமிடையில் ஞாபகார்த்த சின்னங்களும் பகிர்ந்துகொள்ளப்பட்டுள்ளது.