மன்னாரில் தனியாரின் காணியில் தீப்பரவல்

Report Print Ashik in பாதுகாப்பு

மன்னார் கீரி கிராமத்தில் உள்ள தனியாருக்கு சொந்தமான காணி ஒன்றில் நேற்று மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டுள்ளது.

இந்த தீப்பரவல் காரணமாக குறித்த காணியில் காணப்பட்ட மரங்கள் தீயில் எரிந்து சேதமாகியுள்ளதாக பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.

கீரி கிராமத்திற்கு அருகில் உள்ள கர்த்தர் கோவில் பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 2 ஏக்கர் காணியில் நேற்று மாலை திடீரென தீப்பரவல் ஏற்பட்டது.

இதன்போது குறித்த காணியில் காணப்பட்ட தென்னை, பனை மரங்கள் தீயில் பற்றி எரிந்துள்ளன. தீயை கட்டுப்படுத்த முயற்சிகளை மேற்கொண்ட போதும் பலனளிக்கவில்லை.

சம்பவம் தொடர்பாக மன்னார் பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கிய போதும் பொலிஸார் உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்து தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகளை மேற்கொள்ளவில்லை என குற்றம்சாட்டியுள்ளனர்.