கொழும்பு ராஜகிரிய பிரதேசத்தில் செவ்வாய்க்கிழமை மாலை நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டில் பாதாள உலகக்குழு உறுப்பினர் ஒருவர் காயமுற்றுள்ளார்.
ராஜகிரிய, கொட்டா வீதியில் குறித்த துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இதன்போது காயமுற்ற அசித குமார என்ற பாதாள உலக்குழு உறுப்பினர் கையில் காயமடைந்து கொழும்பு தேசிய மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளில் பயணித்துக் கொண்டிருந்த நிலையில் அவர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளது.
ராஜகிரிய கோதமி வீதியில் சில மாதங்களுக்கு முன்னர் நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த அசித குமார அண்மையில் பிணையில் விடுதலை செய்யப்பட்டிருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.