நீதிமன்ற சாட்சி கூண்டில் நிற்க முடியாமல் தடுமாறிய வீரவன்ச

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
382Shares

காலாவதியான கடவுச்சீட்டில் வெளிநாடு செல்ல முயற்சித்தமை தொடர்பில் முன்னாள் அமைச்சர் விமல் வீரவன்சவுக்கு எதிராக வழக்கு ஒன்று இடம்பெற்றுள்ளது.

குற்ற விசாரணை திணைக்கள அதிகாரிகளினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு, கடந்த 2 நாட்களுக்கு முன்னா் நீர்கொழும்பு நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் போது விமல் வீரவன்ச சாட்சி கூண்டில் நிற்க தடுமாறியுள்ளார். இதனால் வழக்கு விசாரணை நிறைவடையும் வரை நாற்காலியில் அமர்ந்திருப்பதற்கு சட்டத்தரணிகளின் ஊடாக அனுமதி கோரப்பட்டுள்ளது.

அதற்கமைய அங்கு அமர்ந்திருந்து சாட்சியளிப்பதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது.

சாட்சியாளர் கூண்டில் விமல் வீரவன்சவுக்கு அமர்ந்திருப்பதற்கு நாற்காலி ஒன்று வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.