ரயில் முன் பாய்ந்து இளம் பெண் பலி

Report Print Shalini in பாதுகாப்பு
216Shares

திருகோணமலை - பாலையூற்று பகுதியில் ஒரு பிள்ளையின் தாய் ஒருவர் ரயில் முன் பாய்ந்து உயிரிழந்துள்ளார்.

இவ்வாறு உயிரிழந்தவர் திருகோணமலை பாலையூற்று புகையிரத நிலைய விடுதியில் வசித்து வந்த 22 வயதுடைய பாத்திமா நப்ரா எனவும் தெரியவருகிறது.

குடும்பத் தகராறு காரணமாக இவர் திருகோணமலையில் இருந்து கொழும்பு நோக்கி பயணித்த ரயிலில் பாய்ந்து உள்ளதாகவும் ஆரம்ப கட்ட விசாரணைகளின் மூலம் தெரியவருகிறது.

குறித்த பெண்ணின் சடலம் திருகோணமலை பொது வைத்தியசாலையில் பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளது.

இந்த சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரனைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.