இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு! இராணுவ வீரரினால் மேற்கொள்ளப்பட்டதாக சந்தேகம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தியதலாவை - பண்டாரவளை பிரதான வீதியில் இன்று அதிகாலை வெடி குண்டு ஒன்று வெடித்த சம்பவம் பல்வேறு சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

குறித்த பேருந்தில் பயணித்த இராணுவ வீரரிடம் இருந்த குண்டு வெடித்துள்ளதாக தற்போது சந்தேகம் எழுந்துள்ளது.

இந்த சம்பவத்திற்கு தொடர்புடைய நபர்களுக்கு எதிராக சட்டரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் ஊடக பேச்சாளர் ருவண் குணசேகர தெரிவித்துள்ளார்.

இந்த வெடிப்பில் பேருந்து தீப்பிடித்து எரிந்துள்ள நிலையில் 19 பேர் காயமடைந்துள்ளனர்.

காயமடைந்தவர்களில் 7 இராணுவ வீரர்களும், 5 விமானப்படை வீரர்களும் உள்ளடங்குவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இலங்கையில் அரசியல் தளம்பல் ஏற்பட்டுள்ள நிலையில் இந்த குண்டுவெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் தரப்பினர் மீண்டும் பலமடைந்துள்ள நிலையிலும், பெரும்பகுதி இராணுவத்தினரை தன்வசம் வைத்திருக்கும் கோத்தபாய அமெரிக்காவிலிருந்து இலங்கை வந்துள்ள நிலையில் இந்த குண்டுவெடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.