வவுனியாவில் ஊருக்குள் படையெடுக்கும் முதலைகள்! அச்சத்தில் மக்கள்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

வவுனியா தாண்டிக்குளம் பிரதேசத்தில் உள்ள வீட்டுத் தோட்டம் ஒன்றுக்குள் வந்த முதலை ஒன்றை இன்று காலை பிடித்துள்ளதாக வவுனியா வனஜீவராசிகள் அலுவலக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

சுமார் 10 அடி நீளமான முதலை தாண்டிக்குளம் பகுதியில் உள்ள வீட்டுத் தோட்டத்திற்கு வந்திருந்ததாக அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரதேசத்தில் காணப்படும் வறட்சியான காலநிலை காரணமாக உணவு தேடி முதலை கிராமத்திற்குள் வந்திருக்கலாம் என அதிகாரிகள் கூறியுள்ளனர்.

பிரதேசவாதிகள் அச்சத்தில முதலையை தாக்கியுள்ளதுடன் முதலைக்கு சிறு காயம் ஏற்பட்டுள்ளது.

பிடிக்கப்பட்ட முதலையை தண்ணீருடன் கூடிய காட்டுப்பகுதியில் விடுவிக்க உள்ளதாகவும் வனஜீவராசிகள் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதேவேளை, வவுனியா - திருநாவற்குளம் பகுதியில் நேற்றைய தினமும் முதலையொன்று மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

அந்த முதலை 5.5 அடி நீளமானதுடன், குறித்த முதலை வன ஜீவராசிகள் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.