நாடு கடத்தப்பட்ட புலிகளின் முன்னாள் உறுப்பினருக்கு விமான நிலையத்தில் நடந்தது?

Report Print Shalini in பாதுகாப்பு

இலங்கையில் ஏற்பட்ட உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சம் கோரியிருந்த 46 வயதுடைய சாந்தரூபன் என்ற இலங்கைத் தமிழ் அகதி அங்கிருந்து நாடு கடத்தப்பட்டு இருப்பதாக அதிகாரப்பூர்வ தகவல்கள் தெரிவிக்கின்றன.

நேற்று இரவு 10 மணியளவில் இலங்கையை வந்தடைந்த இவரை அதிகாரிகள் விசாரணைக்கு அழைத்துச் சென்றதாக தெரிவிக்கப்படுகின்றது.

தமிழ் அகதிகள் பேரவையால் கே.எஸ். ரத்னவேல் என்ற சட்டத்தரணியை ஏற்பாடு செய்து, அவரை விமான நிலையத்திற்கு அனுப்பி , சாந்தரூபனின் குடும்பத்தாரை சந்திப்பதற்கு ஏற்பாடு செய்திருந்தது.

இந்த நிலையில் சாந்தரூபன் 4 மணிநேர விசாரணைகளுக்கு பின் குடும்பத்தாருடன் அனுப்பி வைக்கப்பட்டுள்ளார் என தெரியவருகின்றது.

கடந்த 2012ஆம் ஆண்டு படகு வழியாக அவுஸ்திரேலியா சென்ற சாந்தரூபன், விடுதலைப் புலிகள் இயக்கத்தின் கடற்புலிகள் பிரிவில் படகு கட்டுபவராக இருந்துள்ளார்.

2009இல் யுத்தம் முடிவடைந்த நிலையில், இலங்கை இராணுவத்தின் உயிர் அச்சுறுத்தல் காரணமாக அவுஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த அவர் அவுஸ்திரேலிய சமூகத்திற்குள் வாழ அனுமதிக்கப்பட்டு, 2015இல் குடிவரவுத்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

சில தினங்களுக்கு முன்பு அவர் நாடு கடத்தப்பட இருப்பதற்கான உத்தரவுச் சான்றை வழங்கிய அவுஸ்திரேலிய எல்லைப் படை விமான நிலையத்தின் எந்த பார்வையாளர்களையும் சந்திக்க அவருக்கு அனுமதி கிடையாது என்றும், கொழும்பு விமானத்தில் பாதுகாவலர் உடன் அவர் அனுப்பி வைக்கப்படுவர் என்றும் தெரிவித்திருந்தது.

ஆனால் அந்த உத்தரவில் சாந்தரூபன் கையெழுத்திட மறுத்திருந்தார்.

சாந்தரூபனின் புகார் பரிசீலனையில் இருப்பதால் அவரை இலங்கைக்கு திருப்பி அனுப்பக்கூடாது என ஐ.நா.குழு அவுஸ்திரேலியாவுக்கு கோரிக்கை விடுத்திருந்தது.

இந்த கோரிக்கையை நிராகரித்த அவுஸ்திரேலியா, சாந்தரூபனை நேற்றைய தினம் இலங்கைக்கு நாடு கடத்தியிருந்தது.

சாந்தரூபன் உட்பட எந்த அகதிகளும் நாடுகடத்தப்படக் கூடாது என சில தினங்களுக்கு முன் அவுஸ்திரேலியாவில் போராட்டமும் நடைபெற்றிருந்தது.

அவர் நாடுகடத்தப்பட்டால் கடுமையான ஆபத்தில் சிக்கக்கூடும் என அவுஸ்திரேலியாவில் செயல்படும் தமிழ் அகதிகள் மையம் கவலை தெரிவித்திருந்தது.

தொடர்புடைய செய்தி -

விடுதலைப் புலிகளின் முன்னாள் போராளி இலங்கை வருகின்றார்

Latest Offers