தியத்தலாவை பேருந்துக் குண்டுவெடிப்பு சந்தேக நபர் தேறிவருகின்றார்

Report Print Aasim in பாதுகாப்பு
74Shares

தியத்தலாவையில் இடம்பெற்ற பேருந்துக் குண்டுவெடிப்பு தொடர்பான சந்தேக நபர் தேறிவருவதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணத்தில் பணியாற்றி விடுமுறையில் ஊர் திரும்பிய சார்ஜண்ட் மேஜர் தர ராணுவ அதிகாரியொருவர் திருட்டுத்தனமாக எடுத்து வந்த கைக்குண்டு வெடித்ததில் தியத்தலாவை அருகே தனியார் பேருந்து ஒன்று தீப்பற்றி நாசமானது.

கடந்த 14ம் திகதி அதிகாலை நடைபெற்ற இச்சம்பவத்தின் காரணமாக பேருந்தில் பயணித்த 07 ராணுவத்தினர் மற்றும் 05 விமானப்படையினர் உள்ளிட்ட 19 பேர் படுகாயங்களுக்கு உள்ளாகியிருந்தனர்.

கைக்குண்டை திருட்டுத்தனமாக எடுத்து வந்ததாக சந்தேகிக்கப்படும் ராணுவ அதிகாரியும் படுகாயமுற்று தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் குறித்த சந்தேக நபரின் நிலை தேறிவருவதாகவும் இன்னும் ஓரிரண்டு நாட்களில் அவர் சாதாரண வார்ட்டுக்கு மாற்றப்பட்டுவிடுவார் என்றும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அதன் பின்னர் சந்தேக நபரிடம் வாக்குமூலம் ஒன்றைப் பெற்றுக் கொள்ளவும் அதன் அடிப்படையில் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவும் பொலிஸார் தீர்மானித்துள்ளனர்.

இதற்குமேலதிகமாக ராணுவ விசாரணைக் குழு ஒன்றும் சம்பவம் தொடர்பான விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.