லண்டனில் அச்சுறுத்திய இராணுவ அதிகாரி! இலங்கையில் மீண்டும் குண்டுவெடிப்பு! ஆபத்தான பின்னணியா?

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
362Shares

சமகாலத்தில் இலங்கையில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள இரு பிரதான விடயங்கள் தொடர்பில் இராணுவ தளபதி மஹேஷ் சேனாநாயக்க தெளிவுபடுத்தியுள்ளார்.

பிரித்தானியாவில் தமிழர்களுக்கு உயிர் அச்சுறுத்தல் கொடுத்த இராணுவ அதிகாரி மற்றும் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தியலாவையில் குண்டுவெடிப்பு என்பன தென்னிலங்கையில் பெரும் சலசலப்பினை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிலையில் மேற்கூறிய இருவிடயங்கள் தொடர்பில் எந்தவித அச்சுறுத்தலும் இல்லை என இராணுவ தளபதி விளக்கம் அளித்துள்ளார்.

தியலாவையில் பேருந்து ஒன்றில் குண்டு வெடித்த சம்பவத்தினால் தேசிய பாதுகாப்பிற்கு எவ்வித பாதிப்பும் இல்லை என இராணுவ தளபதி தெரிவித்துள்ளார்.

அத்துடன் பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ விடயம் தொடர்பில் இலங்கை மக்கள் தேவையற்ற அச்சம் மற்றும் தேவையற்ற சம்பவமாக எடுத்து கொள்வது குறித்து வருத்தமாக உள்ளதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

வன்னி பாதுகாப்புப் படை 56 பிரிவின் புதிய அலுவலக தொகுதியை திறக்கும் சந்தர்ப்பத்தில் கலந்து கொண்டு கருத்து வெளியிட்ட இராணுவ தளபதி இவ்வாறு கூறியுள்ளார்.

தியதலாவை பேருந்தில் குண்டு வெடித்தமை உறுதியாகியுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் தற்போது மேஜர் ஜெனரல் தலைமையில் 6 பேர் கொண்ட குழுவினால் விசாரணை நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றதென அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த குண்டு வெடிப்பு தொடர்பில் நாட்டு மக்கள் பதற்றமடைய தேவையில்லை எனவும், அதனால் தேசிய பாதுகாப்பிற்கு அச்சுறுத்தல் அல்ல என அவர் கூறியுள்ளார்.

பிரித்தானிய உயர் ஸ்தானிகர் அலுவலகத்தில் சேவை செய்த பிரிகேடியர் பிரியங்கரவின் பாதுகாப்பிற்காக குறித்த அதிகாரி இலங்கைக்கு அழைக்கப்பட்டுள்ளார்.

எனினும் இந்த விடயம் தொடர்பில் மக்கள் தேவையற்ற அச்சத்தை ஏற்படுத்தி கொண்டிருப்பது குறித்து வருத்தமளிப்பதாக இராணுவ தளபதி மேலும் தெரிவித்துள்ளார்.