குளித்துக்கொண்டிருந்த பெண்ணுக்கு ஏற்பட்ட அவலம்! பிக்கு கைது

Report Print Shalini in பாதுகாப்பு
2454Shares

கேகாலை - புவக்தெனிய பகுதியில் குளித்துக்கொண்டிருந்த பெண்ணை பாலியல் வல்லுறவுக்குட்படுத்த முயற்சித்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

இதில் 42 வயதுடைய பிக்குவே கைது செய்யப்பட்டுள்ளார் என பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இது தொடர்பில் தெரியவருவதாவது,

தனது வீட்டில் குறித்த பெண் குளித்துக்கொண்டிருந்த போது, அந்த வீட்டுக்கு அருகிலுள்ள விகாரையொன்றைச் சேர்ந்த பிக்கு அந்த வீட்டுக்கு சென்றுள்ளார்.

அதன்போது, குளித்துக்கொண்டிருந்த பெண்ணை வல்லுறவுக்கு உட்படுத்த முயற்சித்துள்ளார்.

இதையடுத்து குறித்த பெண் பிக்குவிடமிருந்து விடுபட்டு அது தொடர்பாக வீட்டாருக்கு அறிவித்துள்ளார்.

இந்த சம்பவத்தில் சந்தேகத்தின் பேரில் பிக்குவை பொலிஸார் கைது செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.