புத்தளத்தில் வெடி விபத்து: ஒருவர் பலி!

Report Print Shalini in பாதுகாப்பு
742Shares

புத்தளம் - பாலாவி சந்தியில் இடம்பெற்ற வெடிப்புச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

குறித்த சம்பவம் இன்று காலை வேளையில் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் அதே இடத்தைச் சேர்ந்த 27 வயதுடைய நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார் என்று கூறப்படுகிறது.

பாலாவி சந்தியில் உள்ள பழைய இரும்புக் கடை ஒன்றிலேயே இந்த வெடிப்புச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

இது தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.