மறு அறிவித்தல் வரையில் மூடப்பட்டன கண்டி மாவட்ட பாடசாலைகள்

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

கண்டி நிர்வாக மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளும் மறு அறிவித்தல் வரும் வரையில் மூடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த அறிவித்தலை கல்வி அமைச்சு விடுத்துள்ளது.

இதேவேளை கண்டி நிர்வாக மாவட்டத்திற்குட்பட்ட பிரதேசங்களுக்கு கால வரையறையின்றிய பொலிஸ் ஊரடங்குச் சட்டம் அமுல்படுத்தப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப்பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

அத்துடன், கண்டியில் இதற்கு முன்னரும் அசாதாரண சூழ்நிலை காரணமாக அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.