10 - 14 வயதுக்குட்பட்ட சிறுவர்களின் செயல்: நால்வர் கைது

Report Print Rusath in பாதுகாப்பு

ஏறாவூர் - சந்திவெளி பிரதேசத்தில் உள்ள இரண்டு கடைகளை உடைத்து பணம் மற்றும் பொருட்களை திருடிய சம்பவத்தில் 4 சிறுவர்கள் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த 4 சிறுவர்களையும் இன்று காலை கைது செய்திருந்ததாக ஏறாவூர் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

ஒரு தொகைப் பணம், மற்றும் சுமார் 35 க்கு மேற்பட்ட கைபேசிகள், 2 டெப்கள், கெமரா, அலைபேசி பற்றரி சார்ஜர்கள், அலைபேசி மீள் நிரப்பு அட்டைகள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட 4 சிறுவர்களும் 10 தொடக்கம் 14 வயதிற்கு இடைப்பட்டவர்கள் என்றும் பொலிஸார் தெரிவித்தனர்.

சந்திவெளி பிரதேசத்திலுள்ள ஒரு அலைபேசி விற்பனை நிலையம் மற்றும் உணவு விடுதியில் சனிக்கிழமை இரவு பொருட்களும் பணமும் திருடப்பட்டுள்ளது.

சந்திவெளியிலுள்ள சிறுவர் பராமரிப்பு நிலையத்தில் இருந்த சிறுவர்களே இவ்வாறு திருட்டு சம்பவத்தில் இடுபட்டுள்ளதாக சிசிடிவி கெமராவின் மூலம் தெரியவந்துள்ளது.

தொடர்ந்து சிறுவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில் அவர்கள் தமது உறவினர் நண்பர்களுக்குக் கொடுத்தது போக சுமார் 4,800 ரூபாய் மீதிப் பணம் உட்பட சில பொருட்களையும் கைப்பற்றியுள்ளனர்.