கண்டி கலவரத்தின் அனைத்து தகவல்களும் சிக்கின!

Report Print S.P. Thas S.P. Thas in பாதுகாப்பு

கண்டி மாவட்டத்தில் இடம்பெற்ற இனக்கலவரத்துடன் தொடர்புடைய நபர்கள் தொடர்பில் அனைத்து தகவல்களும் கண்டறியப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன தெரிவித்துள்ளார்.

பேருவளை பிரதேசத்தில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே சுகாதார அமைச்சர் ராஜித சேனாரத்ன,

கண்டியில் இடம்பெற்ற கலவரத்திற்கு ஒரு குழு தலைமை தாங்கியிருக்கிறது. அக்குழு ஒருவரால் வழி நடாத்தப்பட்டுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பாக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டுவருவதாக அவர் தெரிவித்திருக்கிறார்.