மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையே காணப்படுகிறது

Report Print Sinan in பாதுகாப்பு

தற்போது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்க முடியாத நிலையே காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

கட்சி தலைவர்கள் கூட்டம் நாளைய தினம் நடைபெறும். நாம் நம்பிக்கையில்லா பிரேரணையை கைவிடவோ அல்லது பிற்போடவோ இல்லை.

நாட்டில் ஏற்பட்ட குழப்ப நிலையை அடுத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க மீதான நம்பிக்கையில்லா பிரேரணை தொடர்பில் கூட்டு எதிர்க்கட்சி அமைச்சர்கள் பல பேச்சுவார்த்தைகளை நடத்திக் கொண்டு வருகின்றனர்.

தற்போது நாட்டு மக்களுக்கு பாதுகாப்பு வழங்கப்பட முடியாத நிலை காணப்படுகிறது.

இவ்வாறான சந்தர்ப்பத்தில் நம்பிக்கையில்லா பிரேரணையை கொண்டு வந்து இந்த அரசாங்கத்தை வீட்டிற்கு அனுப்ப வேண்டிய தேவை காணப்படுகிறது என குறிப்பிட்டுள்ளார்.