சுமார் மூன்று வருடங்களின் பின் மேலதிக நீர் வௌியேற்றத்திற்காக திறக்கப்பட்ட வான் கதவுகள்

Report Print Aasim in பாதுகாப்பு

உடவளவை நீர்த்தேக்கத்தின் மேலதிக நீரை வெளியேற்றும் வகையில் வான் கதவுகள் திறந்து விடப்பட்டுள்ளதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

நீர்த்தேக்கத்தின் அணைக்கட்டில் சிற்சிறு விரிசல்கள் ஏற்பட்டுள்ள நிலையில் அதனைப் புனரமைக்கும் பணிகளும் பொறியியலாளர்களால் தற்போது முன்னெடுக்கப்படுகின்றன.

இதன் காரணமாக அணைக்கட்டு வழியாக கனரக வாகனங்கள் செல்வது தற்காலிகமாக தடை செய்யப்பட்டுள்ளதாகவும் நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது.

சுமார் மூன்று வருடங்களின் பின்னர் உடவளவை நீர்த்தேக்கத்தில் மேலதிக நீர் வௌியேற்றத்திற்காக வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.