புத்தாண்டு காலத்தில் வாகன விபத்துக்களினால் 39பேர் பலி

Report Print Aasim in பாதுகாப்பு

கடந்த புத்தாண்டு காலப்பகுதியில் வாகன விபத்துக்கள் காரணமாக 39 பேர் உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று நடைபெற்ற ஊடக சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் கருத்து வௌியிட்டுள்ள அவர், கடந்த 12ம் திகதி தொடக்கம் பொலிசார் புத்தாண்டு காலத்தை முன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகள் மற்றும் சோதனை நடவடிக்கைகளை மேற்கொண்டிருந்தனர்.

இதன் ஒருகட்டமாக குடிபோதையில் வாகனம் செலுத்தும் சாரதிகளைக் கண்டறிய கடந்த 12ம் திகதி தொடக்கம் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட சோதனையில் நாடு முழுவதும் 515 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

அதே ​போன்று புத்தாண்டு காலத்தில் குடிபோதையில் அதிவேகமாக வாகனத்தைச் செலுத்த முற்பட்டு விபத்துக்குள்ளானவர்களில் 39 பேர் இதுவரை உயிரிழந்துள்ளனர்.

மேலும் பலர் காயங்களுடன் தொடர்ந்தும் சிகிச்சை பெற்று வருகின்றனர் என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் ருவன் குணசேகர தொடர்ந்தும் தெரிவித்துள்ளார்.