28 ஆண்டுகளுக்குப் பின் மயிலிட்டியை பார்த்து அதிர்ச்சியடைந்த மக்கள்! அம்பலமான உண்மைகள்

Report Print Shalini in பாதுகாப்பு

28 ஆண்டுகளாக இராணுவத்தின் பிடியிலிருந்த மக்களுக்குச் சொந்தமான காணிகள் படிப்படியாக விடுவிக்கப்பட்டு வருகின்றன.

அந்த வகையில் யாழ். வலிகாமம் வடக்கு உயர்பாதுகாப்பு வலயத்திற்குட்பட்டிருந்த 683 ஏக்கர் காணிகள் 13ஆம் திகதி மக்களிடம் கையளிக்கப்பட்டிருந்தன.

5 கிராம சேவகர் பிரிவுகளைச் சேரந்த 12 நலன்புரி நிலையங்களில் வாழ்ந்து வரும் 964 குடும்பங்களுக்கு சொந்தமான 683 ஏக்கர் காணிகளே விடுவிக்கப்பட்டன.

ஆனால் இராணுவத்தால் விடுவிக்கப்பட்ட மயிலிட்டிப் பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்று இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.

இராணுவத்தினர் குறித்த பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் ஒன்றை பேணிவந்துள்ளமை தற்போது தெரிய வந்துள்ளது.

மேலும், இங்கிருந்த ஆயுதக் களஞ்சியம் தற்போதும் இலங்கை படையினர் வசமுள்ள வலி.வடக்கின் ஏனைய பகுதி ஒன்றுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, கடந்த ஏப்பிரல் மாதம் “மயிலிட்டி பகுதியில் ஆயுதக் கிடங்கு இருப்பதாகவும், அதனை மாற்றவேண்டியுள்ள காரணத்தினாலேயே குறித்த பகுதியை விடுவிக்க காலம் தாமதிப்பதாக” முன்னாள் இராணுவத் தளபதி கிரிசாந்த டி சில்வாவிடம் கூட்டமைப்பினர் கேள்வி எழுப்பியிருந்தனர்.

அவ்வாறு கூறப்படுவது பொய்யான கதையாகும், மயிலிட்டியில் ஆயுதக்கிடங்கு இருப்பதாக சொல்லப்படுவது முற்றிலும் போலியான தகவல்” என அவர் பதில் தெரிவித்திருந்தார்.

இதனால் கூட்டமைப்பினருக்கும் இராணுவத்திற்கும் கருத்து மோதல்கள் ஏற்பட்டிருந்தன.

இவ்வாறான நிலையில் தற்போது விடுவிக்கப்பட்டுள்ள மயிலிட்டி பகுதியில் பாரிய ஆயுதக் களஞ்சியம் இருந்தமைக்கான தடயங்கள் காணப்படுகின்றன.

இதன்மூலம் மயிலிட்டியில் ஆயுதம் இருந்தமை உண்மை என்ற விடயம் வெளிப்பட்டுள்ளதுடன், கூட்டமைபபினரிடம் இராணுவத்தளபதி கூறியது பொய் என்பது வெளிவந்துள்ளதாக விசனம் வெளியிடப்பட்டுள்ளது.