வத்தளையில் உள்ள தனியார் வங்கி ஒன்றில் 7 லட்சத்து 50 ஆயிரம் ரூபா பணம் இன்று கொள்ளையிடப்பட்டுள்ளது.
வங்கியில் பாதுகாப்புப் பணியில் இருந்தவர்கள் மீது மிளகாய் தூள் தூவி இந்த கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது என்று பொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் சைக்கிளில் வந்த தனிநபர் ஒருவரே இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டுள்ளார்.
மேலதிக விசாரணைகளைப் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.