யாழ்ப்பாணத்தில் பொலிஸாருக்கு பெரும் அச்சுறுத்தலாக மாறியுள்ள இளைஞர்கள்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

யாழ்ப்பாணத்தில் பொலிஸார் மீது இருவேறு சம்பவங்களில் தாக்குதல் நடத்திய சந்தேகநபர்களை கைது செய்ய முடியவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கடந்த சில தினங்களுக்கு முன்னர் சந்தேகநபர் ஒருவரை கைது செய்ய சென்ற பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டதுடன், கத்தியால் வெட்டியுள்ளார்.

தாக்குல் மேற்கொண்ட சந்தேகநபரை கைது செய்ய முயன்ற போதும், இன்னும் கைது செய்ய முடியவில்லை என ஊர்காவற்துறை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

யாழ்ப்பாணம், ஊர்காவற்துறையில் சந்தேக நபர்களை கைது செய்வதற்கு பொலிஸார் ஒருவர் சென்ற சந்தர்ப்பத்தில், இந்த சந்தேக நபர்கள் பொலிஸ் அதிகாரி மீது தாக்குதல் மேற்கொண்டதுடன் தப்பி சென்றுள்ளனர்.

காயமடைந்த பொலிஸ் அதிகாரி அந்த பகுதியில் உள்ள மக்களின் உதவியுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இது தொடர்பில் யாழ்ப்பாண பிரதி பொலிஸ் மா அதிபரின் ஆலோசனைக்கமைய விசேட நடவடிக்கை ஒன்று ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, அண்மையில் யாழ்ப்பாணத்தில் சிறைச்சாலை பேருந்து மீது தாக்குதல் மேற்கொண்ட சம்பவம் தொடர்பிலான சந்தேக நபர்களும் இன்னமும் கைது செய்யப்படவில்லை என பிரதி பொலிஸ் மா அதிபர் அலுவலகம் தெரிவித்துள்ளது.