இலங்கையில் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளுக்கு ஏற்பட்ட விபரீதம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
290Shares

மின்னேரிய வனவில் பூங்காவில் பெய்த அதிக மழை காரணமாக சுற்றுலா பயணிகளுக்கு பெரும் அசௌகரிய நிலை ஏற்பட்டுள்ளது.

வனவிலங்கு பூங்காவுக்குள் நுழைந்த நூற்றுக்கணக்கான உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் ஜுப் வண்டிகளினால் வெளியே வர முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

அடைமழை காரணமாக ஏற்பட்ட அதிகளவான நீர் காரணமாக இந்த நிலை ஏற்பட்டுள்ளது.

காலை வேளையில் பூங்காவுக்கு சென்று சுற்றுலா பயணிகள் பெரும் நெருக்கடி நிலை காரணமாக இரவு வேளையில் வெளியேறியுள்ளனர்.

உயிர் அச்சுறுத்தலுக்கு மத்தியில் நூற்றுக்கணக்கான சுற்றுலா பயணிகள் நடந்து செல்ல நேரிட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.