பொலிசாரின் இடமாறுதல்களுக்கு அரசியல்வாதி தடை

Report Print Aasim in பாதுகாப்பு
43Shares

பொலிஸ் திணைக்களத்தின் இடமாறுதல்கள் தொடர்பில் அரசாங்கத்தின் முக்கிய அரசியல்வாதியொருவர் தடையாக இருப்பதாக தெரிய வந்துள்ளது.

தேசிய பொலிஸ் திணைக்களம் மற்றும் பொலிஸ் தலைமையகம் ஆகியவற்றினால் பொலிசாருக்கு வழங்கப்படும் இடமாறுதல்களை குறித்த அரசியல்வாதி தடுத்து நிறுத்துவதில் தலையீடுகளை மேற்கொள்வதுடன், ஒரு சிலருக்கு அநீதியான முறையில் இடமாறுதல்களை வழங்க அழுத்தம் கொடுப்பதாகவும் தெரிவிக்கப்படுகின்றது

கடந்த அரசாங்கத்தில் மட்டுமன்றி இந்த அரசாங்கத்திலும் முக்கிய அமைச்சுப் பொறுப்பொன்றை வகிக்கும் மேற்குறித்த அரசியல்வாதி, ஓய்வுபெறும் நிலையில் உள்ள சிரேஷ்ட பொலிஸ் அதிகாரியொருவருக்கு சேவை நீடிப்பை பெற்றுக் கொடுப்பதற்கும் தீவிர நாட்டம் கொண்டுள்ளார்.

இவரது இவ்வாறான செயற்பாடுகள் காரணமாக சட்டம், ஒழுங்கு அமைச்சின் செயற்பாடுகளை உரிய முறையில் மேற்கொள்ள முடியாமல் இருப்பதாக அரசியல் வட்டாரங்களிலிருந்து தெரிய வந்துள்ளது.