இலங்கையில் தொடரும் யுத்த ஆயுதம்! அல்ஜசீரா வெளியிட்ட அதிர்ச்சித் தகவல்

Report Print Tamilini in பாதுகாப்பு

இலங்கையில் தொடர்ந்தும் இடம்பெற்று வரும் கடத்தல் தொடர்பில் சர்வதேச ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

தமிழர்களுக்கு எதிராக அடக்கு முறையின் ஒரு அங்கமாக இந்த கடத்தல் இடம்பெற்று வருவதாக அல்ஜசீரா தொலைக்காட்சி செய்தி வெளியிட்டுள்ளது.

இது தொடர்பான காணொளி ஒன்றை நாளைய தினம் வெளியிடவுள்ளதாக அறிவித்துள்ளது.

இலங்கையில் போர் முடிந்து பல வருடங்களை கடந்துள்ள போதிலும், யுத்த ஆயுதமாக கடத்தல் நடவடிக்கை இன்றும் தொடர்கிறது.

இலங்கையில் காணாமல் போயுள்ள ஆயிரக்கணக்கானவர்களுக்கு நீதி கிடைக்குமா?

அல்ஜசீரா தொலைக்காட்சியில் வெளியிடப்படவுள்ள காணொளியில் இலங்கையில் நடைபெற்ற பல்வேறு கடத்தல் சம்பவங்களின் பின்னணி, அதற்காக செயற்பட்டவர்களின் விபரங்களை அம்பலப்படுத்தியுள்ளது.

அல்ஜசீரா தொலைக்காட்சியில் நாளையதினம் உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ள நிலையில், இன்று ஊடகங்கள் வாயிலாக காணொளி தொடர்பான தகவல்கள் அறிவிக்கப்பட்டுள்ளது.