பயங்கரவாதத்துக்கு நிதியளித்தலைக் கட்டுப்படுத்தும் திட்டம்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதனை கட்டுப்படுத்தல் தொடர்பிலான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய அங்கத்தவர்கள் நியமிக்கப்பட உள்ளனர்.

இதற்கான நடவடிக்கை நிதி அமைச்சர் மங்கள சமரவீரவினால் மேற்கொள்ளப்படவுள்ளது.

காலத்தின் தேவையினை கருத்திற் கொண்டு, பண மோசடியினை தடுத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதி வழங்குவதனை கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ளது.

இது தொடர்பிலான தேசிய ஒருங்கிணைப்பு குழுவுக்கு புதிய அங்கத்தவர்களை நியமித்து அதன் பணியினை விரிவுபடுத்துவதற்கான நிதி மற்றும் ஊடகத்துறை அமைச்சர் மங்கள சமரவீரவின் யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரமளித்துள்ளது.