ஒரே நாளில் ஐந்து பேர் பலி

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

நாட்டின் சில பிரதேசங்களில் இடம்பெற்ற வாகன விபத்துக்களில் சிக்கி ஒரே நாளில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

பொரலஸ்கமுவ, அஹூங்கல, கல்கிஸ்சை, கல்கமுவை, தம்புத்தேகம ஆகிய பிரதேசங்களில் இந்த விபத்துக்கள் நடந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

பொரலஸ்கமுவ பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று மோட்டார் சைக்கிள் ஒன்றில் மோதியதில் 79 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

அஹூங்கல பிரதேசத்தில் முச்சக்கர வண்டி ஒன்று புரண்டு எதிரில் வந்த காரில் மோதியதில் முச்சக்கர வண்டியை ஒட்டிச் சென்ற 44 வயதான நபர் பலியாகியுள்ளார்.

கல்கிஸ்சையில் வீதியில் நடந்து சென்ற 73 வயதான நபர் வான் ஒன்றில் மோதுண்டு உயிரிழந்துள்ளார்.

அதேவேளை கல்கமுவையில் மோட்டார் சைக்கிள் கட்டுப்பாட்டை இழந்து வீதியை விட்டு விலகி அருகில் இருந்த மின் கம்பத்தில் மோதியதில் 33 வயதான நபர் உயிரிழந்துள்ளார்.

தம்புத்தேகம பிரதேசத்தில் இரண்டு மோட்டார் சைக்கிள்கள் ஒன்றுடன் ஒன்று மோதிக்கொண்டதில் இரு பெண்கள் உட்பட மூன்று பேர் காயமடைந்தனர்.

இவர்கள் அனுராதபுரம் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் கூறியுள்ளார்.