தியதலாவ இராணுவ முகாமில் குண்டு வெடிப்பு

Report Print Vethu Vethu in பாதுகாப்பு

தியதலாவை இராணுவ முகாமில் கைக்குண்டு ஒன்று வெடித்தமையினால் மூன்று பேர் காயமடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

காயமடைந்தவர்கள் தியதலாவை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பயிற்சி ஒன்றின் போது இன்று இந்த வெடிப்பு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக கூறப்டபடுகின்றது.

இந்த வெடிப்பில் தன்னார்வ அதிகாரி, இராணுவ சார்ஜென்ட் மற்றும் பெண் தன்னார்வ இராணுவ சிப்பாய் ஒருவர் காயமடைந்துள்ளனர்.

சம்பவம் தொடர்பில் இராணுவ பொலிஸார் மற்றும் தியதலாவை பொலிஸார் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றனர்.