முல்லைத்தீவு நடுக்கடலில் தரித்து நிற்கும் மர்மக் கப்பல்!

Report Print Mohan Mohan in பாதுகாப்பு

இலங்கை கடல் எல்லை ஆழ்கடல் பகுதியில் மர்மமான முறையில் கப்பல் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக முல்லைத்தீவு மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

முல்லைத்தீவு, மணற்குடியிருப்பு பகுதியில் இருந்து இன்று அதிகாலை மீன்பிடித் தொழிலுக்கு சென்ற மீனவர்கள் இந்த கப்பலை அவதானித்து வந்துள்ளதாக தெரிவித்துள்ளனர்.

குறித்த கப்பல் பல மணி நேரம் அவ்விடத்திலயே தரித்து நிற்பதினால் அது ஆழ்கடலில் நங்கூரம் இடப்பட்டிருக்கின்றது என மீனவர்கள் தெரிவித்துள்ளனர்.

மேலும் இந்த கப்பல் சட்டவிரோதமான தொழில் நடவடிக்கையில்; ஈடுபட்டிருக்காலாம் என சந்தேகம் வெளியீட்டுள்ள மீனவர்கள், என்ன காரணத்திற்க்காக இந்தக் கப்பல் நங்கூரம் இடப்பட்டிருக்கின்றது என்ற தகவல் அவர்களுக்கு கிடைக்கவில்லை என மேலும் தெரிவித்துள்ளனர்.