இலங்கை பங்கேற்கும் அமெரிக்காவின் சர்வதேச இராணுவப் பயற்சி ஆரம்பம்

Report Print Ajith Ajith in பாதுகாப்பு

இலங்கை உள்ளிட்ட பல்வேறு நாடுகள் பங்கேற்கும கோபி உல்ப் 2018 என்ற சர்வதேச இராணுவ பயிற்சி மொங்கோலியாவில் ஆரம்பமாகியுள்ளது.

அமெரிக்காவுக்கும், மொங்கோலிய அரசாங்கத்துக்கும் இடையிலான ஒத்துழைப்பை வலுப்படுத்தும் நோக்கில் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள இந்த இராணுவ பயிற்சிகள் மொங்கோலியா கொவ்ட் என்ற மாகாணத்தில் ஆரம்பமாகியுள்ளன.

5 நாட்களாக இடம்பெறும் இந்த இராணுவ பயிற்சியில் இலங்கை, கனடா, பிரான்ஸ், அவுஸ்திரேலியா, தென்கொரியா, நேபாளம், தாய்லாந்து மற்றும் ஜப்பான் முதலான நாடுகளை சேர்ந்த 650 படையினர் பங்கேற்கின்றனர்.

Latest Offers