கந்தளாயில் கேரள கஞ்சாவுடன் ஒருவர் கைது!

Report Print Mubarak in பாதுகாப்பு

திருகோணமலை கந்தளாய் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் கேரளா கஞ்சா நூறு கிராமை வைத்திருந்த ஒருவரை கைது செய்துள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கந்தளாய், வட்டுக்கச்சி பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய ஒருவரையே நேற்றைய தினம் கைது செய்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

சந்தேக நபர் கேரளா கஞ்சா வைத்திருப்பதாக கிடைத்த தகவலுக்கமைய சோதனை மேற்கொண்ட போதே நூறு கிராம் கஞ்சாவுடன் சந்தேக நபரையும் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை தடுத்து வைத்துள்ளதோடு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்த உள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.