புளியம் பொக்கணைக்கு அண்மித்த பகுதியில் வெடி பொருட்கள் அடையாளம் காணப்பட்டது

Report Print Suman Suman in பாதுகாப்பு

புளியம்பொக்கணை சந்தியை அண்மித்த பகுதியில் வெடிபொருட்கள் அடையாளம் காணப்பட்டுள்ளது.

குறித்த பகுதியில் அமைந்துள்ள கரைச்சி கூட்டுறவு சங்கத்திற்கு சொந்தமான காணி ஒன்றில் பாவணையற்ற மலசலகூட குழி ஒன்றில் இவ்வாறு வெடிபொருட்கள் காணப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

இது விடயம் தொடர்பில் தர்மபுரம் பொலிசாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. குழியில் மோட்டார் செல்கள், கைக்குண்டுகள் என பல்வேறு வகையான வெடிபொருட்கள் காணப்படுவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

வெடிபொருட்களை அகற்றுவது மற்றும் செயலிழக்க செய்வது தொடர்பில் கிளிநொச்சி மாவட்ட நீதவான் நீதிமன்றின் அனுமதி வழங்கப்பட்டுள்ளதாகவும், மன்றின் அனுமதியுடன் விசேட அதிரடிப்படையினரின் உதவுயுடன் தற்பொழுது மேற்கொண்டு நடவடிக்கை முன்னெடுக்கப்படுவதாகவும். பொலிசார் தெரிவிக்கின்றனர்.

இரண்டாம் இணைப்பு

கிளிநொச்சி - கண்டாவளை பிரதேச செயலகபிரிவுக்குட்பட்ட புளியம்பொக்கனை பகுதி கரைச்சி வடக்கு கூட்டுறவு சங்கத்தின் பாழடைந்த மலசலகூடத்திலிருந்து ஒரு தொகை பயன்படுத்த முடியாத வெடிபொருட்கள் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளன.

கரைச்சி வடக்கு கூட்டுறவு சங்கத்தின் வளாகத்தை செப்பனிடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது பாழடைந்த மலசலகூடத்தில் வெடிபொருட்கள் இருப்பதை அவதானித்த மக்கள் தருமபுரம் பொலிஸாரிடம் தெரியப்படுத்தினர்.

அதற்கமைவாக பொலிஸார் நீதிமன்ற அனுமதி பெற்று விசேட அதிரடிப்படையினரால் வெடிபொருட்கள் மீட்கப்பட்டுள்ளன.

இதன்போது, 12000 ரவுண்ஸ்கள், 04 ஆர்பீஜி செல்கள், 10 ஆகாஸ் குண்டுகள், 05 கிளைமோர் குண்டுகள், 30 டொங்கன் செல்கள், 02 ஜக்கட்கள், 125 82-2 கைக்குண்டுகள், 10 ஆகாஸ் கைக்குண்டுகள், 17 கே 40, 06 எம் 75 கைக்குண்டுகள், 4 கிலோ சீ4, 550 அடி டேட கோட் வயர்கள் போன்றவை மீட்கப்பட்டுள்ளன.

மேலும், மீட்கப்பட்ட வெடிபொருட்களை விசேட அதிரடி படையினர் செயலிழக்க செய்யவுள்ளனர்.

மேலதிக செய்திகள், புகைப்படங்கள்: யது