ஆவா குழுவிடம் ஒரு சொல் சொன்னால் போதும் துண்டுதுண்டாக வெட்டிப் போடுவார்கள்! யாழில் பயங்கர மிரட்டல்

Report Print Sumi in பாதுகாப்பு

வல்வெட்டித்துறை சி.ஜ.டி எனக் கூறி யாழ்ப்பாணத்தில் ஊடகவியலாளர் ஒருவரை அச்சுறுத்திய சம்பவம் ஒன்று இன்று (13) இடம்பெற்றுள்ளது.

இணையத்தளத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டமைக்காகவே இந்த அச்சுறுத்தல் சம்பவம் இடம்பெற்றுள்ளது.

வல்வெட்டித்துறையைச் சேர்ந்த ஜீவசங்கரி என்ற நபரே இவ்வாறு ஊடகவியலாளரை இன்று காலை 7.25 மணியளவில் பருத்தித்துறை வீதியில் உள்ள சட்டநாதர் சிவன் கோவில் பகுதியில் வைத்து அச்சுறுத்தியுள்ளார்.

ஓரிரு தினங்களுக்கு முன்னர் யாழ்ப்பாணம் வல்லைப் பாலம் பகுதியில் இளைஞர் ஒருவர் அடித்த காயங்களுடன் கிடந்ததாகவும், அவர் யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்ததாகவும் செய்தி வெளியாகியது. அந்த செய்தியின் உண்மை நிலை என்னவென்று இணையத்தளத்தில் செய்தி பிரசுரிக்கப்பட்டது.

இந்த செய்தினை நீக்குமாறு கூறியே இந்த அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன்போது, துப்பாக்கியுடன் வந்த அந்த நபர் தான் வல்வெட்டித்துறை சி.ஜ.டி என்றும், ஆவா குழுவிடம் ஒரு சொல் சொன்னால் ஆவா குழுவினர் துண்டு துண்டாக வெட்டி போடுவார்கள் என்றும் அச்சுறுத்தல் விடுத்துள்ளார்.

இந்த அச்சுறுத்தல் தொடர்பாக ஊடகவியலாளர் கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு பதிவு செய்துள்ளார்.