பிக்குவை கொலை செய்ய முயற்சித்த பூசாரி

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

கதிர்காமம் கிரிவேஹெர விகாரையின் விகாராதிபதி கொபவக தம்மிந்த தேரரை கொலை செய்ய மேற்கொண்ட முயற்சி தொடர்பாக பொலிஸார் முக்கியமான தகவல்களை கண்டறிந்துள்ளனர்.

கதிர்காமம் மகாசேனன் ஆலயத்தின் பிரதான பூசாரியே சம்பவத்தின் முக்கிய குற்றவாளி என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

கிரிவேஹெர விகாரைக்குள் இருக்கும் ஆலயம் ஒன்று சம்பந்தமான பிரச்சினையே இந்த சம்பவத்திற்கு காரணம் எனக் கூறப்படுகிறது.

ஒப்பந்த அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட இந்த கொலை முயற்சியில் 4 பேர் பங்கு கொண்டுள்ளதாகவும் பொலிஸார் குறிப்பிட்டுள்ளனர்.

நேற்றிரவு நடைபெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் தேரருக்கு வயிறு மற்றும் தாடை பகுதிகளில் காயம் ஏற்பட்டதுடன் அவர் சத்திர சிகிச்சைக்கு பின்னர் மேலதிக சிகிச்சைக்காக கொழும்புக்கு அழைத்து வரப்பட்டார்.