பெரிய கஞ்சா செடிகளை கைப்பற்றிய பொலிஸார்: கஞ்சா செடி என்பது தனக்கு தெரியாது என்கிறார் சந்தேக நபர்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

தம்புள்ளை கண்டலம வீதியின் இரண்டாம் கட்டை பகுதியில் அரிசி ஆலை ஒன்றுக்கு பின்னர் வளர்ந்திருந்த இரண்டு பெரிய கஞ்சா செடிகளுடன் ஒருவரை சந்தேகத்தின் பேரில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

சுமார் 9 அடி உயரத்திற்கு வளர்ந்திருந்த இந்த கஞ்சா செடிகள் இதுவரை கிடைத்துள்ள கஞ்சா செடிகளை விடவும் மிகப் பெரியவை என தம்புள்ளை பொலிஸார் தெரிவித்துள்ளனர். பெரிதாக வளர்ந்திருந்த இந்த கஞ்சா செடிகளின் கிளைகளும் பெரிதாக காணப்படுவதாக பொலிஸார் கூறியுள்ளனர்.

இது குறித்து சந்தேக நபரிடம் விசாரித்த போது, தான் அரிசி ஆலையில் தொழில் புரிந்து வருவதாகவும் நீண்டகாலமாக இந்த செடிகள் அங்கு இருந்ததாகவும் எனினும் அவை கஞ்சா செடிகள் என்பது தனக்கு தெரியாது எனவும் கூறியுள்ளார்.

கஞ்சா செடிகள் குறித்து பிரதேசவாசி ஒருவர் வழங்கிய தகவலுக்கு அமைய அரிசி ஆலைக்கு சென்ற பொலிஸார் செடிகளை பறிமுதல் செய்துள்ளனர்.

இந்த கஞ்சா செடிகளை சந்தேக நபர் வளர்த்தார அல்லது அவை தானாக வளர்ந்ததா என்பது குறித்து அறிய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.

கைதுசெய்யப்படட சந்தேக நபர் தம்புள்ளை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்பட உள்ளார். சம்பவம் குறித்து தம்புள்ளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.