பிடியாணைக்கு பயந்து நீதிமன்றில் ஆஜரான பிரபலம்!

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

தேசிய சுதந்திர முன்னணியின் தலைவரான நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவங்சவை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்துமாறு நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் இன்று காலை உத்தரவிட்டிருந்தது.

நீதிமன்றத்தில் ஆஜராகாத காரணத்தினால், நீதிமன்ற இந்த பிடியாணை உத்தரவை பிறப்பித்தது.வீரவங்ச நீதிமன்றத்தில் ஆஜராகாது புறக்கணித்து வந்துள்ளார்.

இந்த நிலையில், நீதிமன்றம் பிடியாணை பிறப்பித்ததை அடுத்து, மனுவொன்றை தாக்கல் செய்து, இன்று பிற்பகல் 3 மணியளவில் வீரவங்ச, நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகியுள்ளார்.

போலி கடவுச்சீட்டு ஒன்றுடன் வெளிநாடு செல்ல முயற்சித்த சம்பவம் தொடர்பான வழக்கிலேயே நீர்கொழும்பு நீதவான் நீதிமன்றம் வீரவங்சவை கைதுசெய்ய பிடியாணை பிறப்பித்திருந்தது.