மிதக்கும் ஆயுத களஞ்சியத்தின் பொறுப்பாளர்கள் தொடர்ந்தும் விளக்கமறியலில்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

காலி துறைமுகத்திற்கு அருகில் அவன்கார்ட் கப்பலில் சட்டவிரோதமான ஆயுத களஞ்சியத்தை நடத்தி வந்தமை சம்பந்தமாக குற்றப் புலனாய்வு திணைக்கள அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ள களஞ்சியத்தின் நடவடிக்கை முகாமையாளர் மற்றும் பொறுப்பாளர் ஆகியோரை எதிர்வரும் 28 ஆம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு காலி பிரதான நீதவான் ஏ.நிசங்க பீரிஸ் இன்று உத்தரவிட்டுள்ளார்.

மிதக்கும் ஆயுத களஞ்சியத்திற்கு பொறுப்பாளராக கடமையாற்றிய கேர்ணல் தோன் தோமஸ் அல்பர்ட் விஜேதுங்க திலக்கரட்ன மற்றும் நடவடிக்கை முகாமையாளராக கடமையாற்றிய மேஜர் மில்லினியகே சுமுது நிலுபுல் கொஸ்தா ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

வழக்கில் மேலதிக அறிக்கையை தாக்கல் செய்த குற்றப் புலனாய்வு திணைக்களம், விசாரணைகள் இன்னும் முடியவில்லை என தெரிவித்துள்ளது.

மேலும் முப்படையினரை தவிர வேறு எவருக்கும் ஆயுத களஞ்சியங்களை வைத்திருக்க அனுமதியில்லை எனவும் திணைக்களம் கூறியுள்ளது.