இலங்கை இராணுவத்தில் ஏற்பட உள்ள திடீர் மாற்றம்

Report Print Steephen Steephen in பாதுகாப்பு

இலங்கை இராணுவத்தின் பலத்தை 25 வீதமாக குறைத்து புலம்பெயர் தமிழர்கள் மற்றும் சர்வதேசத்திற்கு வழங்கிய வாக்குறுதியை நிறைவேற்ற அரசாங்கம் தயாராகி வருவதாக தேசிய சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜயந்த சமரவீர தெரிவித்துள்ளார்.

இதனடிப்படையில், இலங்கை இராணுவத்தின் 33 படைப் பிரிவுகள் எதிர்வரும் ஜூலை மாதம் முதலாம் திகதி கலைக்கப்பட உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதற்கு அமைய ஆயிரம் இராணுவ அதிகாரிகள், 23 ஆயிரத்து 266 படையினர், வடக்கு மாகாணத்தில் உள்ள முக்கியமான 100 முகாம்களில் இருந்து அப்புறப்படுத்தப்பட உள்ளனர் எனவும் ஜயந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

பிட்டகோட்டேயில் உள்ள தேசிய சுதந்திர முன்னணியின் பிரதான அலுவலகத்தில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

நல்லாட்சி அரசாங்கத்தின் முன்னாள் வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர எமது இராணுவத்தை பழிவாங்கும் வகையில் ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அல் ஹூசைன் கொண்டு வந்த யோசனையில் கையெழுத்திட்டுள்ளதுடன் தற்போது அந்த யோசனை செயற்படுத்தப்பட்டு வருகிறது.

அந்த யோசனை எந்த குறைப்பாடும் இன்றி நிறைவேற்றப்பட்டு வருகிறது. இராணுவத்தை நிர்வாக ரீதியாக பழிவாங்கும் யோசனைகள் அதில் அடங்கியுள்ளன.

இதன் கீழ் 33 படைப்பிரிவுகள் கலைக்கப்பட உள்ளன. இதில் 14 நிரந்தர படையணிகளும், 19 தொண்டர் படையணிகளும் உள்ளன. அது மாத்திரமல்ல ஆயிரம் இராணுவ அதிகாரிகள், 23 ஆயிரத்து 266 படையினரும் நீக்கப்பட உள்ளனர்.

இதன் மூலம் இராணுவத்தின் பலம் 25 வீதமாக குறைக்கப்பட உள்ளது. உதாரணமாக புதுக்குடியிருப்பு, நந்திக்கடல், யாழ்ப்பாணம், இரணைமடு,முல்லைத்தீவு, தலைமன்னார், மெனிக்கபார்ம், பருத்தித்துறை, வவுனியா, பூநகரி, கிளிநொச்சி பிரதேசங்களில் இருந்து தலா 4 இராணுவ முகாம்கள் என 100 முகாம்கள் அகற்றப்பட உள்ளன எனவும் ஜயந்த சமரசிங்க குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers