கல்கிஸ்சையில் நடந்த விபரீதம்! ATM இயந்திரத்திலிருந்து மாயமான பெருந்தொகை பணம்

Report Print Vethu Vethu in பாதுகாப்பு
450Shares

கல்கிஸ்சையிலுள்ள ATM இயந்திரத்தில் பெருந்தொகை பணம் காணாமல் போயுள்ளதாக பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

கல்கிஸ்ஸ ஹோட்டல் வீதியில் அமைந்துள்ள தனியார் வங்கிக்கு சொந்தமான ATM இயந்திரத்தில் 37 லட்சம் ரூபா பணம் காணாமல் போயுள்ளதாக கல்கிஸ்ஸ பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

குறித்த வங்கியின் கொழும்பில் உள்ள அலுவலகத்தினால் இந்த ATM இயந்திரம் நிர்வகிக்கப்படுகின்றது. அதில் பணம் வைப்பிடும் நடவடிக்கையினை தனியார் வங்கி ஒன்றினால் மேற்கொள்ளப்படுவதாக தெரிவிக்கப்படுகின்றது.

எப்படியிருப்பினும் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் குறித்த தனியார் வங்கியின் பிரதான அலுவலகத்தில் பணம் கணக்கிடும் போது 35 லட்சம் ரூபாய் பணம் குறைவடைந்துள்ளதாக தெரியவந்துள்ளது.

இவ்வாறு பணம் காணாமல் போன இயந்திரத்திற்கு எவ்வித சேதமும் ஏற்படவில்லை என பொலிஸார் மேற்கொண்ட ஆரம்ப விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இதேவேளை, குறித்த இயந்திரத்தின் கதவுகளை திறக்கும் அனைத்து தொழில்நுட்பமும் தனியார் வங்கியினால் அதிகாரம் வழங்கப்பட்டுள்ள நிறுவனத்திற்கு மாத்திரமே உள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.