முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் உட்பட 11 பேரிடம் கொழும்பில் தீவிர விசாரணை

Report Print Sujitha Sri in பாதுகாப்பு

புலிக்கொடி, சீருடைகள் மற்றும் ஆயுதங்கள் என்பவற்றுடன் கைது செய்யப்பட்ட முன்னாள் விடுதலைப் புலி உறுப்பினர்கள் உட்பட 11பேர் கொழும்பில் வைத்து தீவிர விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

இந்த விடயத்தை சுட்டிக்காட்டி நேற்று பத்திரிகையொன்று செய்தி வெளியிட்டுள்ளது.

இதேவேளை 11 சந்தேகநபர்களும் பயங்கரவாத தடுப்பு பிரிவினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ள நிலையில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

அத்துடன், சம்பவத்தின் பின் ஒட்டுச்சுட்டான் பகுதியில் கண்காணிப்பு மற்றும் சோதனை நடவடிக்கைகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

ஆயுதங்கள் மற்றும் புலிக்கொடி, சீருடைகள் மீட்கப்பட்ட விடயத்தை சாதாரணமாக கருதாது படையினர் குறித்த நடவடிக்கைகளை முன்னெடுத்து வருவதாக வட பகுதிக்கான பிரதி பொலிஸ் மா அதிபர் ரொஸான் பெர்னாண்டோ குறிப்பிட்டுள்ளார் என அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த மாதம் 22ஆம் திகதி அதிகாலை பொலிஸார் மேற்கொண்ட சோதனையின் போது ஒட்டுசுட்டான் - புதுக்குடியிருப்பு வீதியில் வைத்து முச்சக்கரவண்டியொன்றிலிருந்து வெடிபொருட்கள், விடுதலைப்புலிகளின் சீருடைகள் மற்றும் புலிக் கொடிகள் என்பன மீட்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers