வவுனியாவில் ஏற்கனவே புதையல் தோண்டப்பட்ட இடத்திற்கு பாதுகாப்பு வழங்கிய பொலிஸார்

Report Print Theesan in பாதுகாப்பு

வவுனியா - பட்டக்காடு, மரக்காரம்பளை வீதியில் நேற்று மாலை புதையல் தோண்டப்படுவதாக தகவல் கிடைத்த போதும், அவ்வாறன முயற்சிகள் எதுவும் அங்கு மேற்கொள்ளப்படவில்லை என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

எனினும் சற்று நேரம் அங்கு பாதுகாப்பு கடமைகளில் மேற்கொண்டதாக குறிப்பிட்டுள்ளனர். இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,

வவுனியா - பட்டக்காடு, மரக்காரம்பளை வீதியிலுள்ள பகுதியில் குழுவொன்றால் ஏற்கனவே புதையல் தோண்டப்பட்டுள்ளது. எனினும் இந்த முயற்சியின் போது எவ்விதமான பொருட்களும் கிடைக்கவில்லை.

இந்த சந்தர்ப்பத்தில் நேற்று மாலை அப்பகுதியில் புதையல் தோண்டுவதற்கு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக பொலிஸாருக்கு இரகசிய தகவல் கிடைத்துள்ளது.

இதையடுத்து அங்கு சென்ற பொலிஸார் அப்பகுதியில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் எவரும் ஈடுபடவில்லையென கண்டறிந்துள்ளனர்.

எனினும் குறித்த இடத்தில் சற்று நேரம் பாதுகாப்பு கடமைகளை மேற்கொண்ட பின்னர் அங்கிருந்து சென்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Latest Offers