வெளிநாட்டு நாணயங்களை சட்டவிரோதமாக சிங்கப்பூர் கொண்டு செல்ல முயற்சித்த இலங்கை பயணிகள் இருவர் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளனர்.
சுங்க அதிகாரிகளினால் குறித்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைது செய்யப்பட்டவர்கள் 61 மற்றும் 33 வயதுடைய கம்பஹா பிரதேசத்தை சேர்ந்த இருவராகும்.
எமிரேட்ஸ் விமான சேவைக்கு சொந்தமான 348 என்ற விமானத்தில் சிங்கப்பூர் செல்வதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு குறித்த இருவரும் சென்றுள்ளனர்.
அவர்கள் கொண்டு சென்ற பயணப் பை மற்றும் அவர்கள் அணிந்திருந்த ஆடையில் பணத்தை மறைத்து வைத்திருந்த நிலையில் சுங்கப் பிரிவு அதிகாரிகள் கண்டுபிடித்துள்ளனர்.
அதில் 64 லட்சம் ரூபாய் பெறுமதியான 10800 பிரித்தானியா பவுண்ட், 16650 யூரோ மற்றும் 22000 சவுதி ரியால் காணப்பட்டுள்ளன.
பணத்தை பறிமுதல் செய்த சுங்க அதிகாரிகள், குறித்த இருவரையும் விடுதலை செய்துள்ளனர்.