மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு

Report Print Navoj in பாதுகாப்பு

கல்குடா கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பும், மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவை நிலையமும் இணைந்து பாலியல் தொடர்பான விழிப்புணர்வு கருத்தரங்கு ஒன்றை நடத்தியிருந்தது.

வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியில் இன்று இடம்பெற்றது.

மட்டக்களப்பு மாவட்ட சுகாதார சேவை நிலைய முகாமையாளர் எஸ்.எச்.இம்தியாஸ் தலைமையில் நடைபெற்ற நிகழ்வில் வாழைச்சேனை அந்நஹ்ஜதுல் இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரியில் கல்வி பயிலும் மாணவர்களுக்கு பாலியல் தொடர்பான விளக்க விழிப்புணர்வு கருத்தரங்கு நடைபெற்றது.

இதன்போது யௌவன பருவத்தில் ஏற்படும் பிரச்சனைகள் மற்றும் அதற்கான தீர்வுகள், பாலியல் மூலம் தொற்றக் கூடிய நோய்கள் தொடர்பான விழிப்புணர்வு இடம்பெற்றதுடன், பாலியல் தொடர்பாக மாணவர்களிடத்தில் காணப்படும் அறிவை ஆராயும் பொருட்டு வினாப் பத்திரங்கள் வழங்கி வைக்கப்பட்டது.

இங்கு கல்குடா கல்வி மற்றும் சமூக அபிவிருத்தி அமைப்பின் தலைவர் எஸ்.அணீஸ், உப செயலாளர் எம்.எம்.அன்வர் சாதாத், இஸ்லாமிய்யா அரபுக் கல்லூரி மௌலவிமார்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.