கிளிநொச்சி உணவகங்களில் நடக்கும் பயங்கரம்! நீதிமன்று கடுமையாக எச்சரிக்கை

Report Print Yathu in பாதுகாப்பு

கிளிநொச்சி - கரைச்சிப் பிரதேசசபைக்கு முன்பாகவுள்ள வெதுப்பக உணவுப் பொருட்களை பாதுகாப்பற்ற முறையில் வைத்திருந்த அதன் உரிமையாளருக்கு 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் பதில் நீதிவான் ம.கிறேசியன் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

குறித்த விற்பனை நிலையத்தில் வைக்கப்பட்டிருந்த உணவுப் பொருட்களில் வெளவால் எச்சங்கள் காணப்பட்டமை தொடர்பில் திடீர் பரிசோதனை மேற்கொண்ட பொதுச் சுகாதார பரிசோதகர்கள் குறித்த உரிமையாளருக்கு எதிராக மூன்று குற்றச்சாட்டுக்களை பதிவு செய்திருந்தனர்.

இதன்போது 10,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டதுடன் கடுமையாக எச்சரிக்கை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளார்.

இதேவேளை, கிளிநொச்சியில் காலாவதியான உணவுப்பொருட்கள் காட்சிப்படுத்தியமை மற்றும் விற்பனை செய்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட நான்கு வர்த்தகர்களுக்கு தலா 6,000 ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

கிளிநொச்சி மாவட்ட நீதிவான் நீதிமன்றின் பதில் நீதிவான் ம.கிறேசியன் நேற்று இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.

கிளிநொச்சி நகரை அண்மித்த பகுதிகளில் நுகர்வோர் அதிகார சபையினால் மேற்கொண்ட திடீர் சோதனையின் போது கலாவதியான உணவுப்பொருட்களை விற்பனைக்காக காட்சிப்படுத்தியமை, மற்றும் விற்பனை செய்தமை, அதிகூடிய விலையில் பொருட்களை விற்பனை செய்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் பலர் கைது செய்யப்பட்டு அவர்களுக்கு எதிராக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் குறித்த குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் நான்கு பேருக்கு தலா ஆறாயிரம் ரூபா வீதம் 24 ஆயிரம் ரூபா தண்டப்பணம் விதிக்கப்பட்டுள்ளது.

Latest Offers

loading...