பிரதான வீதிகளில் கட்டாக்காலி மாடுகளால் ஏற்படும் விபரீதங்கள்

Report Print Gokulan Gokulan in பாதுகாப்பு

கிண்ணியா நகரசபை எல்லைக்கு உட்பட்ட பிரதான வீதிகளில் தொடர்ந்தும் கட்டாக்காலி மாடுகளின் நடமாட்டத்தினால் அதிகளவான விபத்துக்கள் ஏற்படுவதாக பாதசாரிகள் தெரிவிக்கின்றனர்.

கிண்ணியா - புஹாரி சந்தி தொடக்கம் பிரதான வீதியான டீ சந்தி வரையில் இரவு மற்றும் பகல் நேரங்களில் கட்டாக்காலி மாடுகளின் தொல்லை அதிகரித்துள்ளதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பில் அவர்கள் மேலும் கூறுகையில்,

இரவு நேரங்களில் போதிய மின் வெளிச்சமின்மையால் வீதி விபத்துக்கள் ஏற்படுகின்றன. கடந்த பல மாதங்களாக இந்த விடயம் தொடர்பில் தொடர்ச்சியாக உரியவர்களுக்கு அறிவித்தும் இன்றுவரை எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை.

இதேவேளை கட்டாக்காளி மாடுகள் நடுவீதியால் இரவு மற்றும் பகல் நேரங்களில் உலாவுகின்றன. இதனால் வாகனங்களை செலுத்துவதில் வாகன சாரதிகள் சிரமங்களை எதிர்நோக்குகின்றனர்.

எனவே கட்டாக்காலி மாடுகளை கட்டுப்படுத்த கிண்ணியா நகரசபை முன்வரவேண்டுமென கோரிக்கை விடுக்கப்படுகிறது.